தேசிய செய்திகள்

டெல்லியில் இளைஞர் காங்கிரசார் டார்ச் லைட் ஏந்தி பேரணி

லகிம்பூர் வன்முறையை கண்டித்து டெல்லியில் இளைஞர் காங்கிரசார் டார்ச் லைட் ஏந்தி பேரணியாக சென்றனர்.

புதுடெல்லி,

உத்தர பிரதேச மாநிலம் லக்கிம்பூரில் கடந்த வாரம் பேராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது கார் மேதிய சம்பவம் மற்றும் அதையடுத்து ஏற்பட்ட கலவரத்தில் 4 விவசாயிகள் 2 பாஜகவினர் உட்பட 8 பேர் இறந்தனர்.

விவசாயிகள் மீதுமேதிய காரில் மத்திய உள்துறைஇணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ரா இருந்ததாகவும் அவரைக் கைது செய்ய வேண்டும் என்றும் விவசாயிகளும் எதிர்க்கட்சியினரும் வலியுறுத்தினர். சம்பவம் நடந்தபேது காரில் தனது மகன் ஆசிஷ் மிஸ்ரா இல்லை என்று மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ரா கூறினார்.

இந்தச் சம்பவம் தெடர்பாக ஆசிஷ் மிஸ்ரா மீது உத்தர பிரதேச பேலீஸார் கெலை வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். ஆஷிஷ் மிஸ்ரவை மூன்று நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க போலீசாருக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இதற்கிடையே, அஜய் மிஸ்ராவை மந்திரி பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி வருகிறது.

இந்த நிலையில், லகிம்பூர் வன்முறையை கண்டித்து டெல்லியில் இளைஞர் காங்கிரசார் டார்ச் லைட் ஏந்தி பேரணியாக சென்றனர்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...