தேசிய செய்திகள்

சீனாவுக்கு தக்க பதிலடி கொடுக்க அந்தமான் நிக்கோபாரில் ராணுவ வலிமையை அதிகரிக்க்கும் இந்தியா

இந்திய பெருங்கடற்பகுதியில் ஆதிக்கம் செலுத்த நினைக்கும் சீனாவுக்கு தக்க பதிலடி கொடுக்கும் வகையில் அந்தமான் நிக்கோபாரில், இந்தியா தனது ராணுவ வலிமையை அதிகரிக்கிறது.

புதுடெல்லி

பாகிஸ்தான் மற்றும் ஈரானில் துறைமுகங்களை வசப்படுத்தி, இந்திய பெருங்கடற்பகுதியில் ஆதிக்கம் செலுத்த நினைக்கும் சீனாவுக்கு தக்க பதிலடி கொடுக்கும் வகையில் அந்தமான் நிக்கோபாரில், இந்தியா தனது ராணுவ வலிமையை அதிகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.

இதன் ஒரு கட்டமாக வடக்கு அந்தமானில் இருக்கும் ஐஎன்எஸ் கொஹாஸ்ஸாவில் உள்ள விமான தளத்தை மேம்படுத்தும் பணி நடக்கிறது. நிக்கோபாரில் உள்ள கேம்பெல் விமான தளத்தை முழு வசதியுடன் கூடிய விமானப்படைத் தளமாக மாற்றும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

மலாக்கா நீரிணை வரையும், மேற்கே ஏடன் வளைகுடா வரையும் நமது கடற்பகுதியை பாதுகாக்கும் வகையில் லட்சத்தீவு தலைநகரான அகாத்தியில் உள்ள விமான தளம் போர்த்திறன் உள்ளதாக மாற்றி அமைக்கப்படுகிறது.

உலகின் மொத்த கடற்வணிகத்தில் பாதிக்கும் மேல் இந்த இரண்டு கடற்பகுதி வழியாக நடக்கும் நிலையில், லட்சத்தீவும், அந்தமான் நிக்கோபாரும் இந்திய கடற்படையின் புதிய போர் விமான தங்கு தளங்களாகவும் உருமாற்றம் பெறுகின்றன.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்