கோப்புப்படம் 
தேசிய செய்திகள்

இந்த ஆண்டும் டிஜிட்டல் முறையில் மத்திய பட்ஜெட்..!

மத்திய பட்ஜெட் இந்த ஆண்டும் டிஜிட்டல் மற்றும் பசுமை முறையில் தயாரிக்கப்பட்டு வருகிறது.

தினத்தந்தி

புதுடெல்லி,

நாடாளுமன்றத்தில் ஆண்டுதோறும் தாக்கல் செய்யப்படும் மத்திய பட்ஜெட்டானது அதிகமான பக்கங்களில் அச்சிடப்பட்டு துணிப்பைகளில் கட்டப்படும்.

இந்த அச்சிடும் பணிகள் பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு சுமார் 2 வாரங்களுக்கு முன்பே தொடங்கி விடும். இதன் தொடக்க நிகழ்வாக அல்வா தயாரிக்கும் பணி நடக்கிறது.

இதில் நிதி மந்திரி மற்றும் இணை மந்திரிகள் பங்கேற்பார்கள். இந்த நிகழ்ச்சியுடன் தொடங்கும் பட்ஜெட் அச்சிடும் பணிகளில் ஏராளமான ஊழியர்கள் பங்கேற்கின்றனர்.

அவர்கள் அனைவரும் நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் வரை தனிமைப்படுத்தப்படுகின்றனர். குடும்பத்தினருடன் தொலைபேசியில் கூட பேச அனுமதி கிடையாது.

பட்ஜெட் ஆவணங்களில் நூற்றுக்கணக்கான பிரதிகள் அச்சிடப்படுவதால் ஏராளமான காகிதம் உள்ளிட்ட பொருட்கள் தேவைப்படுகின்றன. அதிக எண்ணிக்கையில் தேவைப்படும் காகிதங்கள், அதிகமான மரங்களின் ஆயுளை குறைக்கின்றன.

ஆனால் மத்தியில் மோடி தலைமையிலான அரசு பதவியேற்றபின் இந்த பட்ஜெட் பிரதிகளின் எண்ணிக்கையை படிப்படியாக குறைத்து வருகிறது. முதலில் ஊடகத்தினர், வெளிப்புற பொருளாதார வல்லுனர்களுக்கு அளிக்கப்படும் பிரதிகள் ரத்து செய்யப்பட்டன.

பின்னர் கொரோனாவை காரணம் காட்டி மக்களவை மற்றும் மாநிலங்களவை எம்.பி.க்களுக்கு வழங்கப்படும் பிரதிகள் நிறுத்தப்பட்டன.

அதேநேரம் டிஜிட்டல் முறையில் பட்ஜெட் ஆவணங்களை உருவாக்கி அவர்களுக்கு வழங்கப்படுகிறது. இதனால் அச்சிடப்படும் பட்ஜெட் பிரதிகளின் எண்ணிக்கை மிகவும் குறைந்துள்ளன.

அதன்படி இந்த ஆண்டும் மத்திய பட்ஜெட் முற்றிலும் பசுமையாகவும், பெரும்பாலும் டிஜிட்டல் முறையிலும் தயாரிக்கப்படுவதாக நிதியமைச்சக வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.

மேலும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அல்வா தயாரிப்பு நிகழ்ச்சியும் அடையாள ரீதியில் எளிமையாக நடத்தப்பட்டு உள்ளது.

டிஜிட்டல் பட்ஜெட் தொகுப்பு பணிகளுக்காக குறைவான எண்ணிக்கையிலான ஊழியர்கள் மட்டும் தற்போது தனிமைப்படுத்தப்பட்டு இருப்பதாக நிதியமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனர்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்