தேசிய செய்திகள்

இந்தியாவில் நுகர்வோர் மத்தியிலான நம்பிக்கை சரிவு

இந்தியாவில் நுகர்வோர் மத்தியிலான நம்பிக்கை குறைந்திருப்பதாக ஒரு புள்ளி விவரம் வெளியாகியுள்ளது.

தினத்தந்தி

தாம்சன் ராய்ட்டர்ஸ் மற்றும் இப்சாஸ் எனப்படும் சந்தை ஆய்வு நிறுவனம் இணைந்து, ஆன்லைன் மூலம் நடத்தப்படும் சர்வேயின் அடிப்படையில், நுகர்வோர் உணர்வுகள் குறித்த குறியீட்டெண்ணை மாதந்தோறும் வெளியிடுகின்றன.

கடந்த மே மாதத்திலிருந்தே நுகர்வோர் மத்தியிலான நம்பிக்கை குறைந்து வருவதாகவும், கடந்த ஜூலையில் மட்டும் சற்றே அது அதிகரித்திருந்ததாகவும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூலையுடன் ஒப்பிடும்போது ஆகஸ்ட் மாதத்தில், நுகர்வோர் மத்தியிலான நம்பிக்கை 3.1 சதவீதம் சரிந்திருப்பதாக கூறப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்புகள், பொருளாதார எதிர்பார்ப்புகள், முதலீடு, தற்போதைய தனிப்பட்ட நிதிநிலை ஆகிய 4 அம்சங்களின் அடிப்படையில், நுகர்வோர் மத்தியிலான நம்பிக்கை குறைந்திருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் உலக அளவிலான பொருளாதார நிலை நுகர்வோரின் எண்ணங்களில் பாதிப்பை ஏற்படுத்தியிருப்பதாகவும், பொருளாதாரம் மற்றும் வேலைவாய்ப்புகள் குறித்த நம்பிக்கை குறைந்துள்ளதால், செலவினங்களை சுருக்குவதாகவும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது