கோப்புப்படம் 
தேசிய செய்திகள்

மே மாதத்தில் 8 முக்கிய உள்கட்டமைப்பு துறைகள் 16.8 சதவீதம் வளர்ச்சி

மே மாதத்தில் 8 முக்கிய உள்கட்டமைப்பு துறைகள் 16.8 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளதாக மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

கொரோனா மற்றும் அதைத்தொடர்ந்து அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காரணமாக பல்வேறு துறைகள் கடந்த ஆண்டு வீழ்ச்சியை சந்தித்தன. இதில் நிலக்கரி, கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, சுத்திகரிப்பு பொருட்கள், உரம், ஸ்டீல், சிமெண்டு மற்றும் மின்சாரம் ஆகிய முக்கியமான 8 உள்கட்டமைப்பு துறைகள் கடந்த மே மாதத்தில் 21.4 சதவீதம் வீழ்ச்சியடைந்திருந்தன.

ஆனால் இந்த ஆண்டு அதே காலகட்டமான கடந்த மே மாதத்தில் அந்த துறைகள் அனைத்தும் ஒட்டுமொத்தமாக 16.8 சதவீதம் வளர்ச்சியடைந்திருப்பதாக மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் வெளியிட்ட தரவுகள் கூறியுள்ளன.

அந்தவகையில் இயற்கை எரிவாயு 20.1 சதவீதம், சுத்திகரிப்பு பொருட்கள் 15.3 சதவீதம், உருக்கு இரும்பு 59.3 சதவீதம், சிமெண்டு 7.9 சதவீதம் மற்றும் மின்சாரம் 7.3 சதவீதம் வளர்ச்சியை கண்டுள்ளன. இதைப்போல நிலக்கரி துறையும் கடந்த ஆண்டு 14 சதவீதத்தை பெற்றிருந்த நிலையில், இந்த ஆண்டு அது 6.8 சதவீத வளர்ச்சியை கண்டிருக்கிறது. எனினும் உரம் மற்றும் கச்சா எண்ணெய் துறைகள் இந்த ஆண்டும் எதிர்மறை வளர்ச்சியையே பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை