புதுடெல்லி,
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு மே 3ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த வைரஸ் தொற்றை தடுக்க மத்திய, மாநில அரசுகள் தேவையான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
இந்நிலையில் இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை தற்போது 23,452 ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை தற்போது 4,813 ஆக உள்ளதாகவும், கொரோனா பாதிப்பால் பலியானோர் எண்ணிக்கை 723 ஆக உயர்ந்துள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.