தேசிய செய்திகள்

இந்தியாவில் போடப்பட்ட தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை 17 கோடியை தாண்டியது

இந்தியாவில் இதுவரை போடப்பட்ட தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை 16.94 கோடியாக உள்ளது என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

இந்தியாவில் கடந்த ஜனவரி 16-ந் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. பல்வேறு வகையான பயனாளர்களை அடையாளம் கண்டறிந்து இந்த தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. மே 1 ஆம் தேதி 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் அதிவேகத்தில் தடுப்பூசி போடப்பட்டு வந்த நிலையில், தற்போது 2-வது அலை நாட்டில் வேகமெடுத்துள்ளதால் தடுப்பூசி போடும் பணிகளின் வேகத்தை மத்திய-மாநில அரசுகள் மேலும் அதிகரித்து இருக்கின்றன. இதன் மூலம் நாள்தோறும் லட்சக்கணக்கான பயனாளர்கள் தடுப்பூசி போட்டு வருகின்றனர்.

அந்த வகையில் நேற்று மட்டும் 16,722 அமர்வுகளில் 20 லட்சத்து 23 ஆயிரம் பேருக்கு தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் இதுவரை போடப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை 16.94 கோடியாக உள்ளது எனவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு