புதுடெல்லி,
இந்தியாவில் கொரோனா தடுப்பூசி திட்டத்தில் கடந்த சில நாட்களாக (பூஜை கால விடுமுறை நாட்களில்) தொய்வு காணப்பட்டது. தினசரி தடுப்பூசி போடுகிற அளவு குறைந்து வந்தது. நேற்று முன்தினம் இந்த எண்ணிக்கை 8 லட்சத்து 36 ஆயிரத்து 118 டோஸ் என்கிற அளவுக்கு குறைந்தது. தற்போது மீண்டும் வேகம் பிடிக்கிறது.
நேற்று காலை 7 மணியுடன் முடிந்த ஒரு நாளில் 41 லட்சத்து 20 ஆயிரத்து 772 டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டன. முதல் டோஸ் போட்டுக்கொண்டவர்கள் எண்ணிக்கை 16 லட்சத்து 80 ஆயிரத்து 633 ஆக இருந்தது. 2-வது டோஸ் செலுத்திக்கொண்டவர்கள் எண்ணிக்கை 24 லட்சத்து 40 ஆயிரத்து 139 ஆகும். இதுவரையில் மொத்தம் 97 கோடியே 65 லட்சத்து 89 ஆயிரத்து 540 டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. இதில் 69 கோடியே 47 லட்சத்து 33 ஆயிரத்து 920 பேர் முதல் டோஸ் போட்டுக்கொண்டுள்ளனர். 2 டோசும் போட்டுக்கொண்டவர்கள் எண்ணிக்கை 28 கோடியே 18 லட்சத்து 55 ஆயிரத்து 620 ஆக உள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது.