தேசிய செய்திகள்

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி கடந்த 11 ஆண்டுகளில் இல்லாத சரிவு ஏற்பட்டுள்ளது

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி கடந்த 11 ஆண்டுகளில் இல்லாத சரிவு ஏற்பட்டுள்ளது என மத்திய புள்ளியியல் துறை தெரிவித்துள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி கடந்த 44 காலாண்டுகளில் அதாவது கடந்த 11 ஆண்டுகளில் இல்லாத சரிவு ஏற்பட்டுள்ளது என்று மத்திய புள்ளியியல் துறை தெரிவித்துள்ளது. அதேபோல், 2019-20-ஆம் நிதியாண்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 4.2 சதவிதமாக குறைந்துள்ளது.

அதற்கு முந்தையை 2018-19-ஆம் நிதியாண்டில் இந்தியாவின் வளர்ச்சி 6.1 சதவிதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. கொரோனா பாதிப்பு காரணமாக, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இந்த சரிவு ஏற்பட்டுள்ளதாகவும், ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டில், மொத்த உள்நாட்டு உற்பத்தியின் சரிவு இன்னும் அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டிற்கான முடிவுகள் வரும் போது தான் இந்தியாவில் கொரோனா ஏற்படுத்திய தாக்கம் முழுமையாக தெரியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விவசாயத்தை அடுத்து இரண்டாவது பெரிய துறையான கட்டுமானத் துறை மார்ச் மாதத்துடன் முடிவடைந்த மூன்று மாதங்களில் இரண்டாவது காலாண்டில் 2.2% ஆக சரிவடைந்தது. நகரங்களில் இருந்து புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த மாநிலங்களுக்கு சென்றதால் ஜூன் காலாண்டில் கட்டுமான நடவடிக்கைகள் மேலும் பாதிக்கப்படும்.

இந்த மாதத்தில், சிமெண்ட் மற்றும் எஃகு உற்பத்தி முறையே 86 சதவீதம்மற்றும் 83.9 சதவீதமாக ஆக சரிவடைந்தது. அதே நேரத்தில் மின்சாரம் மற்றும் நிலக்கரி உற்பத்தி முறையே 22.8 சதவீதம் மற்றும் 15.5 சதவீதம் சரிவடைந்தது. இந்தியாவின் உற்பத்தி கொள்முதல் மேலாளர்களின் குறியீடு, அல்லது பி.எம்.ஐ, ஏப்ரல் 27.4 ஆக மிகக் குறைந்த அளவிற்கு சரிந்தது, அதே நேரத்தில் வர்த்தக ஏற்றுமதி 60 சதவீதம் சரிவடைந்தது.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு