தேசிய செய்திகள்

வெளியிலிருந்து வாங்கப்படும் ஆயுதங்களை வைத்து போர்களை வெல்ல முடியாது - அருண் ஜெட்லி

வெளியிலிருந்து வாங்கப்படும் ஆயுதங்களை வைத்து போர்களை வெல்ல முடியாது என்று நிதி மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் அருண் ஜெட்லி கூறியுள்ளார்.

தினத்தந்தி

புதுடெல்லி

சிறந்த ஆயுத தயாரிப்பாளர்களுக்கான விருது வழங்கும் விழாவில் பேசிய போது அவர், வெளியிலிருந்து வாங்கப்படும் ஆயுதங்களை நம்பியிருந்தால் நாட்டின் பாதுகாப்பு தயார்நிலை முழுமையாக இருக்காது என்றார்.

நமது பாதுகாப்பு தயார்நிலையே சிற்ந்த போர் தடுப்பு வியூகமாக இருந்து, இப்பிரதேசத்தில் அமைதி நிலவ உத்தரவாதம் தருகிறது. இந்தியா உலக அரசியல் நிலைமைகளை மையமாகக் கொண்டு இராணுவத்திற்கான ஆயுத உற்பத்தியை அதிகரிக்க வேண்டும். ஆயுத உற்பத்தியில் பொதுத்துறை நிறுவனங்கள், தனியாருடன் ஆரோக்கியமான போட்டியை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். இந்தியா ஆயுத இறக்குமதியை நம்பி இருக்கக்கூடாது என்று அவர் வலியுறுத்தினார்.

உள்நாட்டு தனியார் இராணுவ தயாரிப்பாளர்கள் வெளிநாட்டு முன்னணி ஆயுத உற்பத்தியாளர்களுடன் இணைந்து ஆயுதங்கள் தயாரிப்பதை முன்னெடுக்கலாம் என்றார் ஜெட்லி. இது ஆயுத உற்பத்தித் தொழிலை ஊக்கப்படுத்தும் என்று அவர் சுட்டிக்காட்டினார். ஆயுத உற்பத்தியில் பெரிய நிறுவனங்கள் மட்டுமின்றி சிறு/குறு தொழில்களும் ஆயுத தயாரிப்பில் ஈடுபட வேண்டும்; அதன் மூலம் சிற்ந்த சூழலை நாட்டில் ஏற்படுத்தலாம் என்றார் அவர்.

இந்தியா மட்டுமே தொடர்ந்து மூன்று ஆண்டுகளுக்கு வேகமாக வளரும் பொருளாதாரம் எனும் சாதனையை நிகழ்த்தியுள்ளது. நாம் வளரும் பொருளாதாரம் எனும் நிலையிலிருந்து வளர்ந்த பொருளாதாரம் எனும் நிலையை அடைய வேண்டும் என்றார் ஜெட்லி. உற்பத்தித்துறையை ஊக்குவிப்பதன் மூலமே நாம் பேரளவில் வேலைவாய்ப்பை அதிகரிக்க முடியும் என்றார் அமைச்சர்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்