தேசிய செய்திகள்

இந்திய கோடீசுவரர்களின் சொத்து மதிப்பு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 15 சதவீதத்துக்கு சமம்

‘ஆக்ஸ்பேம்’ எனப்படும் சர்வதேச தொண்டு நிறுவனம் இந்தியாவின் ஏழை–பணக்காரர் ஏற்றத்தாழ்வு நிலை குறித்து ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டு உள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

கடந்த 1980ம் ஆண்டு முதல் 2017 வரையிலான பல்வேறு தரவுகளை ஆய்வு செய்து இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டு இருக்கிறது.

விரிவடையும் இடைவெளி: இந்திய சமத்துவமின்மை அறிக்கை 2018 என்ற தலைப்பில் வெளியிடப்பட்டு உள்ள அந்த அறிக்கையில், உலக அளவில் மிகப்பெரிய சமத்துவமின்மை நிலவும் நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இருப்பதாக கூறப்பட்டு உள்ளது.

இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜி.டி.பி.) 15 சதவீதத்துக்கு சமமான சொத்தை நாட்டில் உள்ள கோடீசுவரர்கள் வைத்து இருப்பதாகவும், இது கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு 10 சதவீதமாக இருந்ததாகவும் குறிப்பிடப்பட்டு உள்ளது.

அதேநேரம் இந்திய ஏழைகளோ, தங்களிடம் இருப்பதையும் இழந்து பரம ஏழைகளாக மாறி வருவதாகவும் அறிக்கை கூறுகிறது.

கடந்த 1991ம் ஆண்டு இந்தியா கைக்கொண்ட தாராளமயமாக்கல் கொள்கையும், கடந்த 30 ஆண்டுகளாக நாட்டில் அடுத்தடுத்த அமைந்த அரசுகளின் ஒருதலைப்பட்சமான கொள்கைகளுமே இதற்கு காரணம் என ஆக்ஸ்பேம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி நிஷா அக்ரவால் கூறியுள்ளார்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு