தேசிய செய்திகள்

கர்நாடகத்தில் இந்தோ-ஜப்பான் கூட்டு ராணுவ பயிற்சி

கர்நாடக மாநிலம் பெலகாவியில் இந்தோ-ஜப்பான் கூட்டு ராணுவ பயிற்சி நடைபெற்று வருகிறது.

தினத்தந்தி

பெங்களூரு,

இந்தியா மற்றும் ஜப்பான் ராணுவங்களுக்கு இடையில் தர்மா கார்டியன் 2022 என்ற பெயரில் கூட்டு ராணுவ பயிற்சி நடைபெற்று வருகிறது. கர்நாடக மாநிலம் பெலகாவியில் உள்ள மராத்தா லைட் இன்ஃபாண்டரி ரெஜிமெண்ட் செண்டரில் இந்த பயிற்சி நடைபெறுகிறது.

கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் இந்தோ-ஜப்பான் கூட்டு ராணுவ பயிற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு கடந்த பிப்ரவரி 27 ஆம் தேதி தொடங்கிய இந்தோ-ஜப்பான் கூட்டு ராணுவ பயிற்சியானது, மார்ச் 10 ஆம் தேதி(நாளை) நிறைவடைகிறது.

பரஸ்பர ஒத்துழைப்பு, போர்க்கால நடவடிக்கைகள் மற்றும் துரித செயல்பாடுகளை மேம்படுத்துவது குறித்து வீரர்கள் பயிற்சி மேற்கொண்டனர். பயிற்சியின் போது இருநாட்டு ராணுவ வீரர்களும் ஆயுதங்களுடன் ஹெலிகாப்டரில் இருந்து கயிறுகள் மூலம் குதித்த காட்சிகள் சமூக வலைதளங்களில் தற்போது பரவி வருகின்றன.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்