இந்தூர்,
மத்திய பிரதேசத்தில் முதல் மந்திரி கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது. முதல் மந்திரியின் சிறப்பு பணி அதிகாரியாக பிரவீன் காக்கர் என்பவர் இருந்து வருகிறார். இவரது இல்லம் விஜய்நகர் பகுதியில் அமைந்துள்ளது.
இந்நிலையில், டெல்லியில் இருந்து 15 பேர் கொண்ட வருமான வரி துறை அதிகாரிகள் அடங்கிய குழு ஒன்று அவரது வீட்டிற்கு இன்று அதிகாலை 3 மணியளவில் சென்று சோதனை நடத்தி வருகின்றனர். இதனை தவிர்த்து ஷோரூம் ஒன்றிலும் மற்றும் பிற இடங்களிலும் சோதனை நடந்து வருகிறது.