இந்தூர்,
மத்திய பிரதேசத்தில் போக்குவரத்து சிக்னலின் போது நடனமாடிய பெண் மீது நடவடிக்கை எடுக்க அம்மாநில அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். இந்தூரில், போக்குவரத்து சிக்னலில் சிகப்பு விளக்கு எரிந்ததால் வாகனங்கள் காத்திருக்க, திடீரென வந்த பெண் ஒருவர் சாலையின் நடுவே நடனமாடினார்.
வாகனங்களுக்கு மத்தியில் அந்த பெண் நடனமாடிய வீடியோ இணையத்தில் வைரலானதை தொடர்ந்து போக்குவரத்தில் இடையூறு ஏற்படுத்தியதாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டது. விசாரணையில் அவர் ஷ்ரேயா கோல்ரா என்பதும், இன்ஸ்டகிராம் பதிவுக்காக சிக்னலில் நடனமாடிதும் தெரியவந்தது. இதையடுத்து அவர் மீது நடவடிக்கை எடுக்க மாநில உள்துறை மந்திரி நரோத்தம் மிஷ்ரா உத்தரவிட்டுள்ளார்.