புதுடெல்லி,
கொரோனா தாக்கம் காரணமாக, கடந்த பிப்ரவரி மாதம், நாட்டின் தொழில் உற்பத்தி 3.6 சதவீதம் வீழ்ச்சி அடைந்திருப்பதாக தேசிய புள்ளியியல் துறை தெரிவித்துள்ளது.
உற்பத்தி துறையில் 3.7 சதவீதமும், சுரங்க துறை உற்பத்தியில் 5.5 சதவீதமும் வீழ்ச்சி காணப்படுகிறது. அதே சமயத்தில், மின்சார உற்பத்தி 0.1 சதவீத வளர்ச்சி கண்டுள்ளது.
கடந்த ஆண்டு இதே பிப்ரவரி மாத்தில் தொழில் உற்பத்தி 5.2 சதவீத வளர்ச்சி அடைந்திருந்தது.