தேசிய செய்திகள்

கடந்த மே மாதத்தில் தொழில் உற்பத்தி 29 சதவீதம் உயர்வு

கடந்த மே மாதத்தில் தொழில் உற்பத்தி 29 சதவீதம் உயர்ந்துள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

கடந்த மே மாதத்தில், நாட்டின் தொழில் உற்பத்தி குறியீட்டு எண் 116.6 புள்ளிகளாக இருந்தது. இது, கடந்த ஆண்டு இதே மே மாதத்துடன் (90.2 புள்ளிகள்) ஒப்பிடுகையில், 29.3 சதவீதம் அதிகம்.

உற்பத்தி துறை, சுரங்கம், மின்சாரம் ஆகியவற்றின் உற்பத்தி சிறப்பாக இருந்ததால், இந்த உயர்வு ஏற்பட்டுள்ளது.

இருப்பினும், கொரோனாவுக்கு முன்பு இருந்த நிலையை எட்டவில்லை. அதாவது, 2019-ம் ஆண்டு மே மாதம் இருந்த 135.4 புள்ளிகளுடன் ஒப்பிடுகையில், இது குறைவாகும்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்