புதுடெல்லி,
டெல்லி திகார் சிறையில் கைதிகள் சிலர் திடீரென ஆயுதங்களை கொண்டு ஒருவருக்கு ஒருவர் மோதி கொண்டனர். இந்த சம்பவத்தில் 2 பேர்
காயமடைந்துள்ளனர்.
திகார் சிறையில் 3வது பிரிவில் நடந்த மோதல் பற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மோதலில் காயமடைந்த கைதிகள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். சிகிச்சை முடிந்து அவர்கள் மீண்டும் சிறைக்கு சென்றுள்ளனர்.