தேசிய செய்திகள்

காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியாகாந்தி நாடு திரும்பினார்

காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியாகாந்தி அமெரிக்காவிலிருந்து நாடு திரும்பியுள்ளார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி வழக்கம்போல் மேற்கொள்ளும் மருத்துவ பரிசோதனைகளுக்காக வெளிநாட்டுக்கு பயணம் மேற்கொண்டார்.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடருக்கு முன்பு அமெரிக்கா சென்றிருந்த அவர் வெளிநாட்டில் 2 வாரங்கள் தங்கி மருத்துவ பரிசோதனைகளை முடித்து கொண்டு பின்னர் இந்தியாவுக்கு திரும்புகிறார் என்றும் அதன்பின்னர், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் கலந்து கொள்வார் என்றும் காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

சோனியா காந்தியின் வெளிநாட்டு பயணத்தில் அவரது மகன் மற்றும் நாடாளுமன்ற எம்.பி.யான ராகுல் காந்தியும் சென்றுள்ளார். அவரும் நாடு திரும்பிய பின்னர் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் கலந்து கொள்வார் என காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியாகாந்தி அமெரிக்காவிலிருந்து நாடு திரும்பியுள்ளார்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்