தேசிய செய்திகள்

வங்காளதேசத்தை சேந்த விமானம் நாக்பூரில் அவசரமாக தரையிறக்கம்

விமானிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் வங்காளதேசத்தை சேர்ந்த சர்வதேச விமானம் நாக்பூரில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

தினத்தந்தி

நாக்பூர்,

ஓமன் தலைநகர் மஸ்கட்டிலிருந்து வங்கதேச தலைநகர் டாக்காவுக்கு 126 பயணிகளுடன் சென்ற விமானம் இந்திய வான் எல்லையான ராய்ப்பூர் அருகே இன்று காலை பறந்து கொண்டிருந்தது.

அப்போது, விமானிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதையடுத்து, கொல்கத்தா விமான கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு அவசர தரையிறக்கத்திற்கு அனுமதி கோரப்பட்டுள்ளது. எனினும், விமானம் பறந்து கொண்டிருந்த பகுதிக்கு அருகே நாக்பூர் விமான நிலையம் இருந்ததால், விமானத்தை அங்கு திருப்பிவிட்டனர்.

இதையடுத்து, இன்று காலை 11.40 மணியளவில் அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானத்தின் விமானியை அருகே உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை