தேசிய செய்திகள்

இந்தியாவில் மார்ச் முதல் சர்வதேச விமான சேவை மீண்டும் தொடங்க வாய்ப்பு...!

இந்தியாவில் மார்ச் முதல் சர்வதேச விமான சேவை மீண்டும் தொடங்க வாய்ப்புள்ளது,என தகவல் வெளியாகியுள்ளது.

தினத்தந்தி

புது டெல்லி ,

இந்தியாவில் கொரோனா தொற்று பரவலை அடுத்து சர்வதேச விமான சேவை நிறுத்திவைக்கப்ட்டது .இந்நிலையில் தற்போது இந்தியாவில் நாளுக்குநாள் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால்

சர்வதேச விமான சேவையை மத்திய அரசு மீண்டும் தொடங்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே மத்திய அரசு இந்த மாத தொடக்கத்தில் சர்வதேச விமான பயணிகளுக்கான வழிகாட்டுதல்களை வெளியிட்டது, வெளிநாட்டிலிருந்து வருபவர்களுக்கு கட்டாய ஏழு நாள் வீட்டு தனிமைப்படுத்தல் மற்றும் எட்டாவது நாளில் அவர்கள் ஆர்டி-பிசிஆர் பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும் என்ற உத்தரவை நீக்கியது.

இதனால் இந்தியாவில் மார்ச் முதல் சர்வதேச விமான சேவையை மீண்டும் தொடங்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை