தேசிய செய்திகள்

வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்படும் அறைகளில் இணையதள சேவையை முடக்க வேண்டும் - தேசியவாத காங்கிரஸ் வலியுறுத்தல்

வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்படும் அறைகளில் இணையதள சேவையை முடக்க வேண்டும் என தேசியவாத காங்கிரஸ் வலியுறுத்தி உள்ளது.

தினத்தந்தி

மும்பை,

மராட்டிய சட்டசபை தேர்தலில் இன்று வாக்குப்பதிவுக்கு பின்னர் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்படும் அறைகளை சுற்றிய பகுதியில் இணையதள சேவையை முடக்க வேண்டும் என தேசியவாத காங்கிரஸ் வலியுறுத்தி உள்ளது.

இது தொடர்பாக அந்த கட்சி சார்பில் மாநில தலைமை தேர்தல் அதிகாரியிடம் மனு கொடுக்கப்பட்டு உள்ளது. அதில், மராட்டிய சட்டசபை தேர்தலில் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் வி.வி.பாட் எந்திரங்கள் ஹேக் செய்யப்படக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டு உள்ளது. எனவே இதை தடுக்க முன் எச்சரிக்கை நடவடிக்கையாக மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டு உள்ள அறைகளை சுற்றி 3 கி.மீ. தூரத்துக்கு இணையதள சேவையை முடக்கி வைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்