தேசிய செய்திகள்

உத்தர பிரதேசம்; லக்னோவில் இணைய சேவை தொடர்ந்து முடக்கம்

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக உத்தர பிரதேசத்தில் நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது.

தினத்தந்தி

லக்னோ,

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக நாடு முழுக்க போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில், உத்தர பிரதேசத்திலும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றன.

லக்னோ உள்ளிட்ட இடங்களில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்தது. போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் நடைபெற்றது. இந்த வன்முறை சம்பவங்களில் 15 பேர் பலியாகினர். இதனால், உத்தர பிரதேசத்தில் பதற்றம் அதிகரித்தது.

இதையடுத்து, வதந்திகள் பரவாமல் தடுப்பதற்காக லக்னோ உள்ளிட்ட இடங்களில் இணையதள சேவைகள் முடக்கப்பட்டன. இந்த நிலையில், இணைய சேவை முடக்கம் நாளை காலை 8 மணி வரை நீடிக்கும் என்று மாவட்ட மாஜிஸ்திரேடு அபிஷேக் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்