புதுடெல்லி,
பாஸ்போர்ட்டு அலுவலகங்கள் பெரிய நகரங்களில் மட்டுமே இருக்கும். இதனால் மற்ற ஊர்களில் வசிப்பவர்கள் இதற்காக நேரில் வந்து அலைய நேரிடும்.
இந்த நிலையில் இருந்த இடத்திலேயே பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கும் பாஸ்போர்ட்டு சேவா என்ற புதிய செயலியை மத்திய மந்திரி சுஷ்மா சுவராஜ் நேற்று அறிமுகப்படுத்தினார்.
இந்த செயலியை செல்போன், கம்ப்யூட்டர், மடிக்கணிகளில் பயன்படுத்தி நாம் குறிப்பிட்ட பாஸ்போர்ட்டு அலுவலகத்தை தேர்வு செய்து விண்ணப்பித்தால் போலீஸ் சரிபார்ப்பு முடிந்த பிறகு தபாலில் பாஸ்போர்ட்டு வீடு தேடி வரும். இதன் மூலம் அலைச்சல் இன்றி பாஸ்போர்ட்டை விரைவாக பெற இயலும்.
நிகழ்ச்சியில் சுஷ்மா சுவராஜ் கூறுகையில், நாடு முழுவதும் ஒவ்வொரு நாடாளுமன்ற தொகுதிக்கும் ஒரு பாஸ்போர்ட்டு சேவை மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.