ஆமதாபாத்,
சந்கேடா என்ற இடத்தில் சிறப்பு அதிரடிப்படை போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது அங்கு உள்ள ஒரு வணிக வளாகத்துக்கு வெளியே கார் ஒன்று சந்தேகிக்கும்படி நின்று கொண்டிருந்தது. போலீசார் அங்கு சென்று அந்த காரை சோதனை செய்தபோது அதில் செல்லாத ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து 2 ஆயிரத்து 800, ரூ.500 நோட்டுகள் மற்றும் 3 ஆயிரத்து 599 ரூ.1000 நோட்டுகள் என ரூ.99 லட்சத்து 99 ஆயிரம் மதிப்பிலான செல்லாத நோட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதுதொடர்பாக ஒரு பெண் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.