தேசிய செய்திகள்

மல்லையாவுக்கு தொடர்புடைய போலி நிறுவனங்கள் கண்டுபிடிப்பு - அமலாக்கத்துறை தகவல்

மல்லையாவுக்கு தொடர்புடைய போலி நிறுவனங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

இந்திய வங்கிகளில் இருந்து ரூ.9 ஆயிரம் கோடி அளவுக்கு கடன் பெற்று மோசடியில் ஈடுபட்ட விஜய் மல்லையா, இங்கிலாந்தில் தலைமறைவாக வசித்து வருகிறார். அவரை இந்தியாவுக்கு நாடு கடத்துவதற்கான நடவடிக்கைகள் நடந்து வருகிறது.

மல்லையா மீது நிதி மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ள அமலாக்கத்துறை அதிகாரிகள், அதன் அடிப்படையில் தப்பியோடிய பொருளாதார குற்றவாளிகள் சட்டத்தின் கீழும் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த புதிய சட்டத்தின் கீழ் கடந்த வாரம் முதலாவது சோதனையை அமலாக்கத்துறை அதிகாரிகள் நடத்தினர்.

அதன்படி பெங்களூருவை மையமாக கொண்டு வசித்து வருபவரும், மல்லையாவின் நிறுவனங்களில் கடந்த 2017-ம் ஆண்டு வரை பணியாற்றியவருமான சசிகாந்த் என்பவர் மற்றும் அவரது குடும்பத்தினரின் வீடுகளில் இந்த சோதனை நடந்தது. மல்லையாவுக்கு நெருக்கமானவரான சசிகாந்தின் இடங்களில் நடந்த இந்த சோதனையில் பல்வேறு ஆவணங்கள், இ-மெயில்கள், வாட்ஸ்-அப் உரையாடல்கள் கைப்பற்றப்பட்டன.

இதில் கோல்டு ரீப் இன்வெஸ்ட்மென்ட்ஸ், மெக்டவல் ஹோல்டிங்ஸ் லிட். போன்ற மல்லையாவுக்கு தொடர்புடைய போலி நிறுவனங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இந்த நிறுவனங்களின் பெயரில்தான் மல்லையாவின் பணப்பரிமாற்றங்கள் நடந்திருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகம் வெளியிட்டு உள்ளனர்.

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்