தேசிய செய்திகள்

கத்தார் செய்தி நிறுவனம் சைபர் தாக்குதலுக்கு உள்ளானது உறுதியானது

கத்தாரின் செய்தி நிறுவனத்தின் இணையதளம் சைபர் தாக்குதலுக்கு உள்ளானது பூர்வாங்க விசாரணையில் தெரியவந்துள்ளதாக வெளியுறவுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

துபாய்

செய்தி நிறுவனத்தின் இணையதளத்தில் நுணுக்கமான, புதிய வழிகளில் சைபர் தாக்குதல் நடத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இணையதளத்திலுள்ள மின்னணு இடைவெளிகளை பயன்படுத்தி இத்தாக்குதல் நடைபெற்றுதாக கூறப்பட்டுள்ளது. தாக்குதல் யாரால் நடத்தப்பட்டது என்ற விவரம் வெளியிடப்படவில்லை.

இரண்டு தினங்களுக்கு முன்பு இணையதளத்தில் வெளியான கருத்துக்களால் சவூதி அரேபியா, எகிப்து, ஐக்கிய அரபு எமிரேட்டுகள் மற்றும் சில நாடுகள் கத்தாருடனான தூதரக உறவுகளை முறித்துக்கொண்டன. கட்டுரையில் கத்தாரின் மன்னர் அல்-தானி ஈரானுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதைப் பற்றி எச்சரித்தும், ஹமாஸ் மற்றும் ஹிஸ்புல்லா இயக்கங்களை ஆதரித்தும் கருத்துகள் இருந்தன. தூதரக உறவை முறித்துக் கொண்ட நாடுகள் கத்தார் ஈரானின் திட்டங்களை பின்பற்றி தீவிரவாதக் குழுக்களை ஆதரிப்பதாக குற்றஞ்சாட்டின. இதை கத்தார் மறுக்கிறது.

சைபர் தாக்குதல் தொடர்பான விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கியதற்கு அமெரிக்க, இங்கிலாந்து புலனாய்வு நிறுவனங்களுக்கு கத்தாரின் அயலுறவு அமைச்சக அதிகாரிகள் நன்றி தெரிவித்தனர்.

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை