தேசிய செய்திகள்

மத்திய அரசின் திட்டத்தில் சேர மேற்கு வங்காளத்திற்கு அழைப்பு

மத்திய அரசின் திட்டத்தில் சேர மேற்கு வங்காளத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

மத்திய அரசின் பிரதான் மந்திரி கிசான் திட்டம் தொடங்கி ஓராண்டு நிறைவடைந்தது. இதனையொட்டி நடந்த நிகழ்ச்சியில், மத்திய வேளாண்மைத்துறை மந்திரி நரேந்திர சிங் தோமர், கிசான் என்ற செல்போன் செயலியை அறிமுகப்படுத்தினார்.

இதை தொடர்ந்து நிகழ்ச்சியில் மத்திய மந்திரி பேசியதாவது:-

பிரதான் மந்திரி கிசான் திட்டத்தின் கீழ் நாடு முழுவதிலும் 8.45 கோடி விவசாயிகள் பயன் அடைந்து இருக்கிறார்கள். 14 கோடி விவசாயிகளை இத்திட்டத்தில் சேர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. மேற்கு வங்காள மாநிலம் மட்டும் இந்த திட்டத்தில் இணையாமல் இருக்கிறது. இதுதொடர்பாக பல முறை மத்திய அரசு வலியுறுத்தியும், தனிபட்ட முறையில் நானே கடிதம் எழுதியும் முதல்-மந்திரி அதற்கு செவிசாய்க்கவில்லை.

அந்த மாநிலத்தில் மட்டும் சுமார் 70 லட்சம் விவசாயிகள் இருக்கிறார்கள். இதில் 10 லட்சம் விவசாயிகள் தாங்களாகவே இணையதளம் வாயிலாக திட்டத்தில் இணைந்து பயன் அடைந்து உள்ளனர். இந்த திட்டமானது விவசாயிகளுக்கு உதவியாக மட்டும் அல்லாமல் நாட்டின் பொருளாதாரத்தையும் ஊக்குவிக்கிறது என்று அவர் பேசினார்.

பிரதான் மந்திரி கிசான் திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் தலா 3 தவணைகளாக வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்