தேசிய செய்திகள்

அயோத்தி ராமர் கோவில் பிரச்சினையை தீர்க்கும் முயற்சியில் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர்

அயோத்தி ராமர் கோவில் பிரச்சினையை அமைதியான வழியில் தீர்க்கும் முயற்சியில் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் ஈடுபட்டுள்ளார்.

லக்னோ,

ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் பெங்களூரை தலைமையிடமாகக் கொண்டு வாழும் கலை என்ற அமைப்பை நிறுவி உலகம் முழுவதும் யோகா மையங்களை நடத்தி வருகிறார்.

இலங்கை பிரச்சினை உள்பட பல்வேறு சர்வதேச பிரச்சினைகளை அமைதியாக தீர்க்க முயற்சி மேற்கொண்டார். போர், பூகம்பம், புயலால் பாதிக்கப் பட்ட மக்களுக்கு உதவி வருகிறார்.

தற்போது அயோத்தி ராமர் கோவில் பிரச்சினையை அமைதியான வழியில் தீர்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இதில் அவர் இருதரப்பினருக்கும் இடையே நடுநிலையாளராக செயல்படுகிறார்.

நேற்று உத்தரப்பிரதேச மாநிலம் சென்ற ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர், லக்னோவில் தலைமைச் செயலகத்தில் முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்தை சந்தித்து பேசினார்.
அப்போது அயோத்தி ராமர் கோவில் பிரச்சினைக்கு சமரச தீர்வு காண்பது தொடர்பாக 40 நிமிடங்கள் அவருடன் ஆலோசனை நடத்தினார். அவரது முயற்சிக்கு முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் வரவேற்பு தெரிவித்தார்.

அயோத்தி விவகாரத்தில் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் முதலில் விஜயம் செய்யவுள்ளார், இக்பால் அன்சாரி மற்றும் ஹாஜி மெஹ்பூப் ஆகியோருடன் சந்திப்பிற்கு பின்னர்,

இன்று ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் முதலில் விஜயம் அயோத்தி செல்கிறார். இக்பால் அன்சாரி மற்றும் ஹாஜி மெஹ்பூப் உள்ளிட்ட முஸ்லிம் அமைப்பு தலைவர்களை சந்தித்து பேச்சு நடத்துகிறார்.மேலும் இந்து அமைப்பு தலைவர்களையும் சந்தித்து பேசுகிறார்.

முன்னதாக ஸ்ரீஸ்ரீரவி சங்கர் நிருபர்களிடம் கூறியதாவது:-

நான் ஒற்றுமையை விரும்புகிறேன். ஒருவருக்கொருவர் நல்லுறவுடன் இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். எனது இந்த முயற்சி ஒரு தொடக்கம்தான். எல்லா விஷயங்களையும் இனி நாம் பேச இருக்கிறோம் என்றார்.

முதல்-மந்திரியுடனான அவரது சந்திப்பு பற்றி அரசு அதிகாரிகள் கூறும்போது, அயோத்தி பிரச்சினையில் முதல்-மந்திரியின் நிலை தெளிவாக உள்ளது. மாநில அரசானது அரசியல் கட்சி இல்லை. இதில் கோர்ட்டு மூலம் எந்த உடன்பாடு ஏற்பட்டாலும் அதை மதித்து வரவேற்க தயாராக உள்ளோம் என்று தெரிவித்தனர்.

பாபரி மஸ்ஜித்-ராம் ஜான்மபூமி வழக்கில் பங்குதாரர்களில் ஒருவர் சுன்னத் வக்ஃப் வாரியத்திற்கு 20 கோடி ரூபாய் செலுத்தி, அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய இடத்திற்கு தங்களது உரிமைகளை கைவிடுமாறு உத்தரவிட்டுள்ளார்.