தேசிய செய்திகள்

அமலாக்கத்துறை சம்மன்: டெல்லி ஐகோர்ட்டில் கார்த்தி சிதம்பரம் தொடர்ந்த மனுவை, மீண்டும் சுப்ரீம் கோர்ட் ஏற்றது

அமலாக்கத்துறை சம்மனை எதிர்த்து டெல்லி ஐகோர்ட்டில் கார்த்தி சிதம்பரம் தொடர்ந்த மனுவை, மீண்டும் சுப்ரீம் கோர்ட் தங்கள் வசமே விசாரணைக்கு எடுத்தது. #INXMediaCase

புதுடெல்லி,

ஐ.என்.எக்ஸ். மீடியா பணமோசடி வழக்கில் சி.பி.ஐ.யால் கைது செய்யப்பட்ட கார்த்தி சிதம்பரம் திகார் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.

ஐ.என்.எக்ஸ். மீடியா பணமோசடி வழக்கின் விசாரணை மார்ச் 20-ந்தேதிக்கு பதிலாக 22-ந்தேதி நடைபெறும் என டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதிகளான

எஸ். முரளிதர் மற்றும் ஐ.எஸ். மேத்தா ஆகியோர் கொண்ட அமர்வு இன்று அறிவித்தது.

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு உள்ள கார்த்தி சிதம்பரம் சார்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் வாதிடுகிறார். அவர் 20-ந்தேதி ஆஜராக முடியாத நிலையில் விசாரணை 22-ந்தேதி நடைபெறுகிறது.

விசாரணையை 22-ந்தேதி நடத்துவதில் எந்த எதிர்ப்பும் இல்லை என கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா கூறியுள்ளார். இந்த அறிவுறுத்தல்களை நாங்கள் ஏற்கிறோம் என அமலாக்க துறையின் வழக்கறிஞர் வினோத் திவாகர் கூறினார்.

இது பற்றி நீதிமன்ற அமர்வு கூறும்பொழுது, தேதியை நீட்டிக்க அமலாக்க துறை எதிர்ப்பு எதுவும் தெரிவிக்கவில்லை. அதனால் மார்ச் 22-ந்தேதி விசாரணை மேற்கொள்ளப்படும் என கூறியுள்ளது.

கார்த்தியை பணமோசடி வழக்கில் மார்ச் 20-ந்தேதி வரை கைது செய்யவோ அல்லது அவருக்கு எதிராக எந்தவித அச்சுறுத்தல் நடவடிக்கை எடுக்கவோ கூடாது என அமலாக்க துறைக்கு உயர் நீதிமன்றம் கடந்த மார்ச் 9-ந்தேதி உத்தரவிட்டது.

இந்த நிலையில் வழக்கு விசாரணை மார்ச் 22-ந்தேதிக்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதனால் அமலாக்க துறை கார்த்தியை கைது செய்யும் தேதியும் நீட்டிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் அமலாக்கத்துறை சம்மனை எதிர்த்து டெல்லி ஐகோர்ட்டில் கார்த்தி சிதம்பரம் தொடர்ந்த மனுவை, மீண்டும் தங்கள் வசமே விசாரணைக்கு எடுத்தது சுப்ரீம் கோர்ட் . மனு மீது மார்ச் 26-ல் விசாரணை; அதுவரை, கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய அமலாக்கத்துறைக்கு சுப்ரீம் கோர்ட் தடை விதித்தது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்