தேசிய செய்திகள்

ஐ.ஆர்.சி.டி.சி. ஓட்டல் ஊழல் வழக்கு: லாலுவுக்கு இடைக்கால ஜாமீன் நீட்டிப்பு

ஐ.ஆர்.சி.டி.சி. ஓட்டல் ஊழல் வழக்கில், லாலுவுக்கு இடைக்கால ஜாமீனை 28-ந் தேதி வரை நீட்டித்து டெல்லி சி.பி.ஐ. கோர்ட்டு உத்தரவிட்டது.

தினத்தந்தி

புதுடெல்லி,

கால்நடை தீவன ஊழல் தொடர்பான 4 வழக்குகளில், ராஷ்டிரீய ஜனதாதள தலைவர் லாலு பிரசாத் யாதவுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அதே சமயத்தில், அவர் ரெயில்வே மந்திரியாக இருந்தபோது, இந்திய ரெயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகத்தின் (ஐ.ஆர்.சி.டி.சி.) ஓட்டல்களை இயக்க தனியாருக்கு ஒப்பந்தம் அளித்ததில் முறைகேட்டில் ஈடுபட்டதாக சி.பி.ஐ. தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளது.

இவ்வழக்கில் லாலுவுக்கு இடைக்கால ஜாமீன் அளிக்கப்பட்டுள்ளது. இதை 28-ந் தேதி வரை நீட்டித்து, டெல்லி சி.பி.ஐ. கோர்ட்டு நீதிபதி அருண் பரத்வாஜ் உத்தரவிட்டார். 28-ந் தேதி அன்று, லாலுவின் பொதுவான ஜாமீன் மனு மீது தீர்ப்பு அளிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்