தேசிய செய்திகள்

பல்கலைக்கழக பொது நுழைவுத்தேர்வில் தொடரும் குளறுபடிகள் - மாணவர்கள் கவலை

பல்கலைக்கழக பொது நுழைவுத்தேர்வில் தொடரும் குளறுபடிகளால் மாணவர்கள் கவலை அடைந்துள்ளனர்.

தினத்தந்தி

புதுடெல்லி,

மத்திய பல்கலைக்கழகங்களில் இளங்கலை மாணவர் சேர்க்கைக்கு இந்த ஆண்டு பொது நுழைவுத்தேர்வு (க்யூட்) நடத்தப்பட்டது. கடந்த சில நாட்களுக்கு முன்பு நடத்தப்பட்ட இந்த தேர்வில் பல குளறுபடிகள் ஏற்பட்டன. இதில் முக்கியமாக தொழில்நுட்ப கோளாறு காரணமாக நூற்றுக்கணக்கான மையங்களில் தேர்வு எழுத முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் அந்த மாணவர்களுக்கு மறுதேர்வு அறிவிக்கப்பட்டது.

ஆனால் அந்த தேர்விலும் குளறுபடிகள் ஏற்பட்டுள்ளதாக மாணவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதில் முக்கியமாக, தேர்வுக்கான ஹால்டிக்கெட்டுகள் முடிந்த தேதியில் இருந்ததாக அவர்கள் கூறியுள்ளனர்.

அந்தவகையில் ராஜஸ்தானை சேர்ந்த யுவராஜ் சிங் சவுகான் என்ற மாணவருக்கு ஆகஸ்டு 10-ந்தேதி தேர்வு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், 7-ந்தேதி அவர் ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்துள்ளார். ஆனால் ஹால்டிக்கெட்டை பார்த்தபோது, தேர்வுக்கான தேதி 6 என இருந்தது. இதனால் அவர் கடும் அதிர்ச்சி அடைந்தார்.

இதைப்போல உத்தரபிரதேசம், பீகார் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த மாணவர்கள் பலரும் இந்த பிரச்சினையை எதிர்கொண்டு இருக்கின்றனர். எனவே தங்களுக்கு தேர்வு எழுத ஒரு மறுவாய்ப்பு வழங்குமாறு தேசிய தேர்வு முகமை மற்றும் பல்கலைக்கழக மானியக்குழுவுக்கு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து