தேசிய செய்திகள்

வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் டி.கே.சிவக்குமாரின் டெல்லி வீட்டில் சிக்கிய ரூ.8¾ கோடி ஹவாலா பணமா?

வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் டி.கே.சிவக்குமாரின் டெல்லி வீட்டில் ரூ.8¾ கோடி ஹவாலா பணம் சிக்கியதாக தகவல் வெளியாகி உள்ளது.

பெங்களூரு:

கர்நாடக காங்கிரஸ் தலைவராக பணியாற்றி வருபவர் டி.கே.சிவக்குமார். இந்த நிலையில் கடந்த 2017-ம் ஆண்டு டி.கே.சிவக்குமாரின் வீடு, அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அப்போது டெல்லியில் உள்ள டி.கே.சிவக்குமாரின் வீட்டில் இருந்து ரூ.8 கோடி சிக்கி இருந்தது. இந்த நிலையில் டி.கே.சிவக்குமார் சட்டவிரோத பணபரிமாற்றத்தில் ஈடுபட்டு வருவதாக வருமான வரித்துறையினர் கொடுத்த தகவலின்பேரில் டி.கே.சிவக்குமார் மீது அமலாக்கத்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் அவர் கைது செய்யப்பட்டார். தற்போது அவர் ஜாமீனில் உள்ளார்.

இந்த நிலையில் டி.கே.சிவக்குமார் சட்டவிரோத பணபரிமாற்றத்தில் ஈடுபட்டது தொடர்பாக கடந்த சில தினங்களுக்கு முன்பு டெல்லியில் உள்ள மக்கள் பிரதிநிதிகள் கோர்ட்டில் டி.கே.சிவக்குமார் உள்பட 5 பேர் மீது அமலாக்கத்துறையினர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து இருந்தனர். மேலும் இந்த வழக்கு விசாரணை வருகிற 1-ந் தேதி முதல் தொடங்கி நடைபெற உள்ளது. அன்றைய தினம் விசாரணைக்கு ஆஜராக டி.கே.சிவக்குமார் உள்பட 5 பேருக்கு கோர்ட்டு நோட்டீசு அனுப்பி உள்ளது. இந்த நிலையில் அமலாக்கத்துறையினர் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் டி.கே.சிவக்குமார் வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.8 கோடி ஹவாலா பணம் என்று கூறப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இது 1-ந் தேதி வழக்கு விசாரணைக்கு ஆஜராக உள்ள டி.கே.சிவக்குமாருக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி