ஜெனீவா,
இந்தியாவில் கொரோனாவுக்கு எதிராக உள்நாட்டில் உருவாக்கப்பட்ட தடுப்பூசி கோவேக்சின். ஐதராபாத்தை சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம், இந்த தடுப்பூசியை உருவாக்கியுள்ளது.
இந்தியாவில் தடுப்பூசி திட்டத்தின்கீழ் பயன்பாட்டில் உள்ள இந்த தடுப்பூசியை உலக சுகாதார அமைப்பின் அவசர கால பயன்பாட்டு அங்கீகார பட்டியலில் சேர்க்கக்கோரி பாரத் பயோடெக் நிறுவனம் விண்ணப்பித்துள்ளது. எனினும் இதுவரை அனுமதி வழங்கப்படவில்லை. இந்த நிலையில் கோவேக்சின் தடுப்பூசியை அவசர கால பயன்பாட்டுக்கு அனுமதி வழங்குவது குறித்து 24 மணி நேரத்துக்குள் உலக சுகாதார அமைப்பு முடிவெடுக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.