தேசிய செய்திகள்

இந்தியாவில் பெட்ரோல் - டீசல் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு உள்ளதா? அதிகாரிகள் விளக்கம்

ஈரான், இஸ்ரேல்-அமெரிக்கா இடையேயான போரால் இந்தியாவில் பெட்ரோல் -டீசல் விநியோகத்தில் தற்போதைக்கு தட்டுப்பாடு ஏற்படாது என்று மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்

ஈரானின் அணு ஆயுத திட்டங்களை கடுமையாக எதிர்த்து வரும் அமெரிக்கா, இது தொடர்பாக ஒப்பந்தத்தை எட்டுவதற்கு அந்த நாட்டை வற்புறுத்தியது.ஆனால் இந்த பேச்சுவார்த்தையில் தீர்வு ஏற்படாத நிலையில், நேற்று முன்தினம் இஸ்ரேலுடன் இணைந்து ஈரான் மீது திடீரென போர் தொடுத் தது அமெரிக்கா. ஏவுகணைகள், டிரோன்கள் மூலம் இரு நாட்டு படைகளும் கூட்டாக நடத் திய தாக்குதலில் ஈரான் தலைநகர் டெஹ்ரான் உள்பட நாடு முழுவதும் முக்கிய நகரங்கள் பெருத்த சேதத்தை சந்தித்தன. போர் விமானங்கள் குண்டு வீசியதில் டெஹ்ரான் குலுங்கியது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய இந்த தாக்குதல்களில் முதல் நாளிலேயே ஈரானின் உச்சபட்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி (வயது 86) கொல்லப்பட்டார்.

இது ஈரான் மட்டுமின்றி உலக நாடுகளுக் கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளன. மேலும் ஈரான் ராணுவ மந்திரி அசிஸ் நாசிர்சாடே, ராணுவ தளபதி அப் துல் ரகிம் மவுசவி, புரட்சிகர காவல்படை தளபதி முகமது பக்பூர், ராணுவ ஆலோசகர் அலி சம்கானி ஆகியோரும் உயிரிழந்தனர். இவர்கள் அனைவரும் ராணுவ கவுன்சில் ஆலோசனை கூட்டத்தில் பங் கேற்றிருந்தபோது, அந்த இடத்தை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் பலியாகினர்.

அயதுல்லா அலி காமேனி மரணத்தால் அதிர்ச்சியில் உறைந்துள்ள ஈரான் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு கடுமையான பதிலடி கொடுக்கப் படும் என சபதம் செய்துள்ளது. இதற்கிடையே, இஸ்ரேல்-அமெரிக்கத் தாக்குதலுக்கு பதிலடியாகவும், ஈரான் தலைமை மதகுரு கமேனி கொல்லப்பட்டதற்குப் பழிவாங்கும் வகையிலும், உலகில் கச்சா எண்ணெய் ஏற்றுமதிக்கு அதிகம் பயன்படுத்தப்படும் கடல் பகுதிகளில் ஒன்றான ஹோா்முஸ் நீரிணையை ஈரான் நேற்று முன் தினம் மூடியுள்ளது.

Also read:போர் நிறுத்தம் ஏற்படுமா..? தொலைபேசியில் இஸ்ரேல் பிரதமருடன் பிரதமர் மோடி பேசியது என்ன..?

இந்தியா தனக்குத் தேவையான 88 சதவீத கச்சா எண்ணெய், 60 சதவீத இயற்கை எரிவாயுவை சவூதி அரேபியா, கத்தாா், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் இருந்து கப்பல்கள் மூலம் இந்த நீரிணை வழியாகவே இறக்குமதி செய்து வருகிறது.இந்த நீரிணையை ஈரான் மூடிவிட்ட போதிலும், இந்தியாவில் தற்போதைக்கு பெட்ரோல்-டீசல், எரிவாயு தட்டுப்பாடு ஏற்படாது என்று மத்திய அரசு அதிகாரிகள் கூறியுள்ளனர். ஏனெனில் இந்தியாவிடம் ஏற்கெனேவே 10 நாள்களுக்குத் தேவையான பெட்ரோல் , டீசல், எரிவாயு இருப்பு உள்ளது. இதேபோல் அவசர காலத்துக்கு பயன்படுத்துவதற்காக சேமித்து வைக்கப்பட்டுள்ள பெட்ரோல், டீசல், எரிவாயு ஆகியவை மேலும் 5 முதல் 7 நாள்கள் வரை பயன்படுத்த முடியும்..இதேபோல், ஹோா்முஸ் நீரிணை ஈரானால் மூடப்பட்டிருப்பது அதிக காலம் நீடிக்காது எனக் கூறப்படுகிறது. அப்படி நீடிக்கும்பட்சத்தில், வளைகுடா நாடுகளுக்கு மாற்றாக ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய்யை இந்தியா மீண்டும் இறக்குமதி செய்யும் எனவும் அதிகாரிகள் வட்டரத்தில் தெரிவிக்கப்பட்டது.