கேரள மாநிலம் காசர்கோடு பகுதியில் இருந்து 2016-ம் ஆண்டு 20-க்கும் மேற்பட்டோர் ஆப்கானிஸ்தான் சென்று ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தில் இணைந்தது தெரியவந்தது. சிரியாவிற்கும் சென்றனர் என கூறப்பட்டது. இவ்வழக்கை தேசிய புலனாய்வு பிரிவு மேற்கொண்டு வருகிறது. இலங்கையில் தாக்குதலை அடுத்து, தென்னிந்தியாவில் ஐ.எஸ். பயங்கரவாதம் தொடர்பான வழக்கில் தீவிரம் காட்டுகிறது.
இந்நிலையில் ஐ.எஸ். பயங்கரவாதம் தொடர்பாக கேரளாவில் தேசிய புலனாய்வு பிரிவினர் அதிரடி சோதனையை மேற்கொண்டுள்ளனர்.
காசர்கோடு ஐ.எஸ். மாடல் தொடர்பாக மூன்று சந்தேகத்திற்கு இடமானவர்களின் வீடுகளில் தேசிய புலனாய்வு பிரிவினர் சோதனையை மேற்கொண்டுள்ளனர். கேரளாவின் காசர்கோடு மற்றும் பாலக்காடு பகுதியில் சோதனை நடந்துள்ளது. மூன்று பேரிடம் தேசிய புலனாய்வு பிரிவு விசாரணையையும் மேற்கொண்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.