தேசிய செய்திகள்

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட சுகாதார ஊழியர்கள் தனிமைப்படுத்தப்படும் காலத்தை பணிக்காலமாக கணக்கிட வேண்டும் - மாநிலங்களுக்கு மத்திய அரசு வலியுறுத்தல்

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட சுகாதார ஊழியர்கள் தனிமைப்படுத்தப்படும் காலத்தை பணிக்காலமாக கணக்கிட வேண்டும் என மாநிலங்களுக்கு மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. நாடு முழுவதும் டாக்டர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட சுகாதார ஊழியர்கள் கொரோனாவுக்கு எதிரான போரில் முன்நின்று களப்பணியாற்றி வருகின்றனர்.

கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் சுகாதார ஊழியர்களும் வைரஸ் தொற்றுக்கு ஆளாவது தொடர்கதையாக உள்ளது. அப்படி வைரஸ் தொற்றால் பாதிக்கப்படும் சுகாதார ஊழியர்கள் தனிமைப்படுத்தப்படுகிறார்கள். இந்த தனிமைப்படுத்தல் காலம் சுகாதாரப் பணியாளர்களுக்கு விடுப்பாக கணக்கிடப்பட்டு வருகிறது.

கொரோனா தொடர்பான வழக்குகள் விசாரணையின்போது சுப்ரீம் கோர்ட்டு இதனை பலமுறை சுட்டிக்காட்டி சுகாதார ஊழியர்களுக்கு பலன் தரும் முடிவை எடுக்க மத்திய அரசை வலியுறுத்தியது. அதன் பேரில் மத்திய அரசும் இது குறித்து தீவிரமாக பரிசீலித்து வந்தது.

இந்த நிலையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட சுகாதார ஊழியர்கள் தனிமைப்படுத்தப்படும் காலத்தை அவர்களின் பணிக்காலமாக கணக்கிடும்படி மாநில அரசுகளை மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

இது தொடர்பாக மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் தலைமைச் செயலாளர்கள், அனைத்து எய்ம்ஸ் ஆஸ்பத்திரியின் இயக்குனர்கள், மத்திய அரசு ஆஸ்பத்திரிகளில் இயக்குனர்கள் மற்றும் மருத்துவ கண்காணிப்பாளர்களுக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்