தேசிய செய்திகள்

இஸ்ரேல் தூதரகம் அருகே குண்டுவெடிப்பு: தேடப்படுபவர்களின் படங்கள் வெளியீடு

தலைநகர் டெல்லியில் உள்ள இஸ்ரேல் தூதரகம் அருகே கடந்த ஜனவரி 29-ந் தேதி ஒரு குண்டு வெடித்தது. இதனால் அருகே நிறுத்தப்பட்டிருந்த காரின் கண்ணாடிகள் நொறுங்கின. இந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமை விசாரித்து வருகிறது.

தினத்தந்தி

இந்த நிலையில், குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் இரு நபர்களின் புகைப்படங்களையும், வீடியோவையும் தேசிய புலனாய்வு முகமை நேற்று வெளியிட்டது.

சந்தேகிக்கப்படும் இரு நபர்கள் குறித்து தகவல் தெரிவிப்பவர்களுக்கு தலா ரூ.10 லட்சம் பரிசு வழங்கப்படும் என்றும், அவர்களைப் பற்றிய தகவல்களை do.nia@gov.in, info.nia@gov.in ஆகிய மின்னஞ்சல்கள் மூலமாகவும், 011-24368800,

9654447345 என்ற தொலைபேசி எண்கள் வழியாகவும் தெரிவிக்கலாம் என தேசிய புலனாய்வு முகமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்