தேசிய செய்திகள்

நீட் நுழைவுத்தேர்வுக்கான ஹால்டிக்கெட்டுகள் வெளியீடு

செப்டம்பர் 31-ம் தேதி நடைபெற உள்ள நீட் நுழைவுத்தேர்வுக்கான ஹால்டிக்கெட்டுகள் வெளியிடப்பட்டுள்ளன.

தினத்தந்தி

புதுடெல்லி,

நீட் நுழைவுத்தேர்வு செப்டம்பர் 13-ம் தேதி நடைபெறுகிறது. இந்நிலையில் நீட் நுழைவுத்தேர்வுக்கான ஹால்டிக்கெட்டுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன.

முன்னதாக மருத்துவ படிப்புக்கான தேசிய தகுதி நுழைவுத்தேர்வு (நீட்) செப்டம்பர் 13-ம் தேதி நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் நடைபெற உள்ளதாக என்டிஏ அறிவித்திருந்தது. மேலும் தேர்வுக்கு தேசிய அளவில் 15 லட்சத்து 97 ஆயிரத்து 433 பேர் விண்ணப்பித்துள்ளனர் என்றும், அவர்களுக்கு விரைவில் ஆன்லைனில் ஹால்டிக்கெட் பதிவேற்றம் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும் விண்ணப்பதாரர்களில் 99.87 சதவீதம் பேருக்கு அவர்கள் விரும்பிய தேர்வு மைய இடம் ஒதுக்கீடு செய்யப்படும். தேர்வு தொடங்குவதற்கு முன்பும் தேர்வு நடந்து முடிந்த பின்பும் தேர்வு மையங்களை கிருமிநாசினி கொண்டு சுத்தப்படுத்த விரிவான ஏற்பாடுகள் செய்யப்படும். தேவைக்கு ஏற்ப, விண்ணப்பதாரர்களுக்கு முகக் கவசம், கையுறை வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

நீட் நுழைவுத்தேர்வுக்கான ஹால்டிக்கெட்டுகளை மாணவர்கள், தேசிய தேர்வு முகமை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து வருகின்றனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து