தேசிய செய்திகள்

சந்திரபாபு நாயுடுவுக்கு ஆதரவு தெரிவித்து ஐ.டி. ஊழியர்கள் கார் பேரணி நடத்த திட்டம் - போலீசார் தீவிர வாகன சோதனை

ஆந்திரா-தெலுங்கானா எல்லையில் தடுப்புகள் அமைத்து போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

தினத்தந்தி

ஐதராபாத்,

தெலுங்கு தேசம் கட்சித் தலைவரும், ஆந்திர முன்னாள் முதல்-மந்திரியுமான சந்திரபாபு நாயுடு, ரூ.371 கோடி திறன்மேம்பாட்டு நிதி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு ராஜமுந்திரி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு வழங்கப்பட்ட நீதிமன்ற காவலை அக்டோபர் 5-ந்தேதி வரை நீட்டித்து விஜயவாடா கோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த நிலையில் 'சலோ ராஜமுந்திரி' என்ற பெயரில் சந்திரபாபு நாயுடுவுக்கு ஆதரவு தெரிவித்து ஐதராபாத் ஐ.டி. நிறுவன ஊழியர்கள் கார் பேரணி நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது. இதையடுத்து ஆந்திரா-தெலுங்கானா எல்லையில் தடுப்புகள் அமைத்து போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு