தேசிய செய்திகள்

பீகாரில் உயிருடன் இருப்பவருக்கு மரண சான்றிதழ் வழங்கிய அவலம்

பீகாரில் உயிருடன் இருப்பவரை இறந்து விட்டார் என மருத்துவமனையில் மரண சான்றிதழ் வழங்கிய அவலம் நடந்து உள்ளது.

தினத்தந்தி

பாட்னா,

பீகாரின் பாட்னா மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கடந்த 3ந்தேதி சுன்னு குமார் (வயது 40) என்பவர் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அவர் கொரோனா பாதிப்புகளால் உயிரிழந்து விட்டார் என அவரது உறவினர்களிடம் நேற்று தெரிவிக்கப்பட்டது.

அதன்பின் தகனமேடைக்கு உடலை எடுத்து சென்ற உறவினர்கள் இறுதியாக அவரை பார்த்துள்ளனர். அதில், வேறொருவரின் முகம் தெரிந்து அதிர்ச்சி அடைந்தனர். அவர்களிடம் ஒப்படைக்கப்பட்ட உடல் வேறு யாரோ ஒருவருடையது என தெரிய வந்தது.

இதன்பின் நடந்த விசாரணையில், சுன்னு குமார் மருத்துவமனையில் இருந்துள்ளார் என்றும் மற்றொரு நோயாளியின் உடலை அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைத்து உள்ளனர் என தெரிய வந்தது. இதனால் அவரது உறவினர்கள் ஆத்திரமடைந்தனர். இந்த விவகாரத்தில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மருத்துவமனையின் கண்காணிப்பாளர் டாக்டர் ஐ.எஸ். தாக்குர் கூறியுள்ளார்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து