தேசிய செய்திகள்

முருக மடாதிபதி கைது குறித்து விவாதிக்காமல் இருப்பது நல்லது- குமாரசாமி கருத்து

முருக மடாதிபதி கைது குறித்து விவாதிக்காமல் இருப்பது நல்லது என்று குமாரசாமி தெரிவித்துள்ளார்.

பெங்களூரு: முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-சித்ரதுர்கா முருக மடத்தில் பாலியல் சம்பவம் நடந்திருக்க கூடாது என்பது எனது கருத்து. இது மிகவும் சிக்கலான விஷயம். கர்நாடகத்தில் ஏற்கனவே உணர்வு பூர்வமாக பல பிரச்சினைகள் ஏற்பட்டு வருகின்றன. இத்தகைய விஷயங்கள் குறித்து விவாதிக்காமல் இருப்பதே நல்லது. அரசு சட்டப்படி எந்த மாதிரியான விசாரணை நடத்த வேண்டுமோ அதை நடத்தட்டும். இதுகுறித்து நான் அதிகம் பேச விரும்பவில்லை.

சுற்றுலாத்துறை மந்திரி ஆனந்த்சிங் ஒரு நபருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். அந்த நபர் மீதே போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். கொலை மிரட்டல் விடுத்த மந்திரி மீது வழக்கு பதிவு செய்யவில்லை. இதன் மூலம் அதிகாரம் தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து சட்டசபை கூட்டத்தில் பேசுவேன்.

இவ்வாறு குமாரசாமி கூறினார்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...