தேசிய செய்திகள்

பாரதீய ஜனதா மீது மக்கள் கோபத்தில் உள்ளனர்: காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி

பாரதீய ஜனதா மீது மக்கள் கோபத்தில் உள்ளனர் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். #RahulGandhi

புதுடெல்லி,

உத்தரப் பிரதேச மாநிலம் கோராக்பூர், பூல்பூர் ஆகிய மக்களவை தொகுதிகளின் எம்.பி.க்களாக இருந்த யோகி ஆதித்ய நாத், கேசவ்பிரசாத் மவுரியா ஆகியோர் முதல்வர், மற்றும் துணை முதல்வராக பொறுப்பேற்றனர். எனவே காலியாக உள்ள இந்த இரு தொகுதிகளுக்கும் சமீபத்தில் தேர்தல் நடந்தது. அதே போன்று பிஹார் மாநிலத்தில் உள்ள அரேரியா மக்களவை தொகுதிக்கும் ஜகனாபாத், பபுவா ஆகிய 2 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெற்றது.

இந்த தொகுதிகளில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன. இதில் கோரக்பூர் தொகுதி மற்றும் புல்பூர் தொகுதியில் சமாஜ்வாடி கட்சி வெற்றி பெற்றது. இந்த நிலையில், இரு தொகுதிகளிலும் பாரதீய ஜனதா கட்சி தோல்வி அடைந்துள்ளது குறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பாரதீய ஜனதா மீது மக்கள் கொண்ட கோபத்தையே இடைத்தேர்தல் முடிவு பிரதிபலிக்கிறது. தேர்தலில் மக்களின் முடிவு ஒரு நாள் இரவில் ஏற்பட்ட மாற்றம் கிடையாது என்று தெரிவித்துள்ளார்.

பீகாரில் அராரியா மக்களவை தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் லாலு பிரசாத் யாதவ் கட்சியின் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சி வெற்றி பெற்றது. ஜெகனாபாத் சட்ட சபை தொகுதியிலும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சி வெற்றி பெற்றது. பபுவா சட்டப்பேரவை தொகுதியில் பாரதீய ஜனதா கட்சி வெற்றி பெற்றது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்