தேசிய செய்திகள்

அயோத்தி பிரச்சினையில் ஒருமித்த கருத்தை எட்டுவது அவ்வளவு எளிதானது அல்ல

மராட்டிய மாநிலம் நாக்பூரில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் அந்த அமைப்பின் பொதுச்செயலாளர் பய்யாஜி ஜோஷி கலந்து கொண்டார்.

நாக்பூர்,

ஆலோசனைக்கூட்டம் முடிந்ததும் அவர் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பய்யாஜி ஜோஷி கூறியதாவது:

அயோத்தி பிரச்சினையில் ஒரு மித்த கருத்தை எட்டுவது அவ்வளவு எளிதானது அல்ல. ஆனாலும் அங்கு ராமர் கோவில் கட்டுவது உறுதி. இந்த விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு எங்களுக்கு சாதகமாக வரும் என நம்புகிறோம். தீர்ப்பு வந்த பிறகு கோவில் கட்டும் பணிகள் தொடங்கும்.

அயோத்தி விவகாரத்தில் பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வுகாண ரவிசங்கர் மேற்கொண்டு வரும் முயற்சிகளை வரவேற்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.