தேசிய செய்திகள்

அன்பு நண்பர் டிரம்ப் உடன் பேசியது மகிழ்ச்சி - பிரதமர் மோடி

டிரம்ப்பின் அமைதி முயற்சிகளுக்கு இந்தியா ஆதரவு அளிக்கும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

பிரதமர் மோடி வெளியிட்ட எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-

இன்று எனது அன்பு நண்பர் டிரம்ப் உடன் பேசியது மகிழ்ச்சியாக இருந்தது. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருட்களுக்கான வரி இனி 18 சதவீதம் ஆக குறைக்கப்பட்ட வரி விதிக்கப்படும் என்பதில் மகிழ்ச்சி. இந்த அற்புதமான அறிவிப்புக்காக அதிபர் டிரம்ப்பிற்கு 140 கோடி மக்கள் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

இரண்டு பெரிய பொருளாதாரங்கள் மற்றும் உலகின் பெரிய ஜனநாயக நாடுகள் இணைந்து பணியாற்றும்போது, அது மக்களுக்கு பயன் அளிப்பதுடன் இரு தரப்பும் பரஸ்பரம் பயன்பெறும் வகையில் ஏராளமான வாய்ப்புகளை திறந்துவிடும்.

உலக அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் செழிப்புக்கு டிரம்ப்பின் தலைமை மிகவும் முக்கியமானது. டிரம்ப்பின் அமைதி முயற்சிகளுக்கு இந்தியா ஆதரவு அளிக்கும். நமது உறவை இன்னும் உயரத்திற்கு கொண்டு செல்ல இணைந்து பணியாற்ற தயாராக உள்ளேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செசல்ஸ் நாட்டின் ஜனாதிபதி 5-ந்தேதி இந்தியா வருகை; சென்னை, மும்பைக்கும் பயணம்

வடகிழக்கு மாநிலங்களுக்கு மிக உயரிய மதிப்பளித்தவர் பிரதமர் மோடி: மத்திய மந்திரி சோனோவால்

பிரதமர் மோடியுடன் அமெரிக்க அதிபர் டிரம்ப் பேச்சு

மார்க்கெட் நடுவே கேட்பாரற்று கிடந்த சூட்கேஸ்... உள்ளே நிர்வாண நிலையில் இளம்பெண் சடலம் - பீகாரில் பரபரப்பு

கணவனை கொலை செய்துவிட்டு நாடகமாடிய புதுப்பெண்: கிடுக்கிப்பிடி விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்