தேசிய செய்திகள்

சித்தராமையா கார் மீது முட்டை வீசியது காங்கிரஸ் கட்சியினர் தான்; ரேணுகாச்சார்யா எம்.எல்.ஏ. சொல்கிறார்

சித்தராமையா கார் மீது முட்டை வீசியது காங்கிரஸ் கட்சியினர் தான் என ரேணுகாச்சார்யா எம்.எல்.ஏ. சொல்கிறார்.

தினத்தந்தி

சிக்கமகளூரு;

தாவணகெரே மாவட்டம் ஒன்னாளி தொகுதி பா.ஜனதா எம்.எல்.ஏ. ரேணுகாச்சார்யா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

குடகு மாவட்டம் மடிகேரிக்கு சென்ற சித்தராமையாவின் கார் மீது முட்டை வீச்சு சம்பவம் நடந்துள்ளது. சித்தராமையாவின் கார் மீது முட்டை வீசியவர்கள் பா.ஜனதாவினர் இல்லை.

காங்கிரஸ் கட்சியினர் தான் அவரது கார் மீது முட்டை வீசி உள்ளனர். இந்த செயலை காங்கிரஸ் கட்சியினர் செய்துவிட்டு, பா.ஜனதாவினர் செய்ததாக கூறுகிறார்கள். வேண்டுமென்றே பா.ஜனதா கட்சியின் மீது அவப்பெயர் ஏற்படுத்த முயற்சிக்கிறார்கள்.

பா.ஜனதாவினர் இத்தகைய கீழ்தரமான அரசியல் சய்யமாட்டார்கள். இதுபோன்ற செயலிலும் பா.ஜனதாவினர் ஈடுபட மாட்டார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்