புதுடெல்லி,
மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி நிர்மலா சீதாரமன், ராணுவம், விமானப்படை, கடற்படையின் செயல்பாடுகளை ஆய்வு செய்து வருகிறார். ஐஎன்எஸ் விக்ரமாதித்தியா போர்க் கப்பலில் அண்மையில் பயணம் செய்தார். இதை தொடர்ந்து, இந்திய விமானப்படையின் சுகோய் 30 ரக ஜெட் விமானத்தில் இன்று பயணம் செய்தார்.
விமானிக்கு அடுத்த இடத்தில் அமர்ந்து, விமானி உடையணிந்து நிர்மலா சீதாராமன் பயணம் செய்தார். ஜோத்பூர் விமானப்படை தளத்தில் இருந்து 30 நிமிடங்கள் வரை அவர் பயணம் செய்தார். இதன் மூலம் சூப்பர்சோனிக் ஜெட் போர் விமானத்தில் பயணம் செய்த முதல் பெண் பாதுகாப்புத் துறை அமைச்சர் என்ற பெருமையை நிர்மலா சீதாராமன் பெற்றுள்ளார்.
சுகோய் போர் விமானத்தில் பறந்தது குறித்து கருத்து தெரிவித்த பாதுகாப்புத்துறை மந்திரி நிர்மலா சீதாராமன், சுகோய் போர் விமானத்தில் பறந்த அனுபவம் மறக்க முடியாதது. அவசர காலத்தில் பாதுகாப்பு துறையின் தயார் நிலையை இதன் மூலம் அறிய முடிந்தது இவ்வாறு அவர் தெரிவித்தார். #NirmalaSitharaman #Sukhoi-30