கோப்புப்படம் 
தேசிய செய்திகள்

இத்தாலியில் புதிதாக 18,765 பேருக்கு கொரோனா பாதிப்பு: மேலும் 551 பேர் பலி

இத்தாலியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 18,765 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது.

தினத்தந்தி

ரோம்,

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 12.47 கோடியை தாண்டி உள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 10,06,94,778 பேர் குணமடைந்துள்ளனர். வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 27 லட்சத்து 45 ஆயிரத்து 145 பேர் உயிரிழந்துள்ளனர்.

இத்தாலியில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த நாடு தழுவிய பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இத்தாலி நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 18,765 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதன்மூலம் அங்கு இதுவரை கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 34 லட்சத்து 19 ஆயிரத்து 616 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் ஒரே நாளில் 551 பேர் உயிரிழந்துள்ள நிலையில், அங்கு கொரோனா வைரசுக்கு பலியானோர் எண்ணிக்கை 1 லட்சத்து 05 ஆயிரத்து 879 ஆக அதிகரித்துள்ளது. இத்தாலியில் இதுவரை கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 27,53,083 ஆக அதிகரித்துள்ளது. தற்போது இத்தாலியில் சுமார் 5,60,6545 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு