தேசிய செய்திகள்

சித்தராமையாவுக்கு ஜெகதீஷ் ஷெட்டர் நேரில் வாழ்த்து

முதல்-மந்திரியாக பதவி ஏற்கும் சித்தராமையாவுக்கு, முன்னாள் முதல்-மந்திரி ஜெகதீஷ் ஷெட்டர் நேரில் வாழ்த்து தெரிவித்தார்.

தினத்தந்தி

பெங்களூரு:

கர்நாடக புதிய முதல்-மந்திரியாக சித்தராமையா பதவி ஏற்க உள்ளார். இதையொட்டி அவருக்கு பல்வேறு கட்சிகளின் தலைவாகள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்த ஜெகதீஷ் ஷெட்டர் நேற்று பெங்களூருவில் சித்தராமையாவை நேரில் சந்தித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். அதன் பிறகு ஜெகதீஷ் ஷெட்டர் நிருபர்களிடம் கூறுகையில், 'சித்தராமையாவுக்கு வாழ்த்து கூறுவதற்காக நான் அவரது வீட்டிற்கு வந்தேன். அவருக்கு வாழ்த்து தெரிவித்தேன். எனது இந்த சந்திப்பில் வேறு எந்த விஷயமும் இல்லை. காங்கிரஸ் மேலிடம் எனக்கு ஏதாவது பொறுப்புகளை வழங்கினால் அதை செய்ய தயாராக உள்ளேன்' என்றார்.

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்