தேசிய செய்திகள்

ஆந்திராவில் ஆன்லைன் சூதாட்ட வலைதளங்களை தடை செய்ய வலியுறுத்தி மத்திய அமைச்சருக்கு ஜெகன் மோகன் ரெட்டி கடிதம்

ஆந்திராவில் ஆன்லைன் சூதாட்ட வலைதளங்களை தடை செய்ய வேண்டும் என மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத்திற்கு ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி கடிதம் எழுதியுள்ளார்.

தினத்தந்தி

ஐதராபாத்,

இந்தியாவில் தற்போது ஆன்லைன் பந்தயங்கள், சூதாட்டம் உள்ளிட்ட விளையாட்டுகள் பிரபலமாக விளையாடப்பட்டு வருகின்றன. ஆரம்பத்தில் நேரப்போக்கிற்காக இது போன்ற விளையாட்டில் பங்கேற்பவர்கள், பின்னர் பணம் கட்டி விளையாடத் துவங்குகின்றனர். சில நூறு ரூபாய்களில் ஆரம்பித்து, சில லட்ச ரூபாய்கள் வரை பணம் கட்டி விளையாடி வருகின்றனர்.

இது போன்ற ஆன்லைன் விளையாட்டுகள் மூலம் எளிதில் பணம் சம்பாதிக்கலாம் என்ற எண்ணத்தில் சிலர் தங்களது சேமிப்பு பணத்தை எல்லாம் பந்தயமாக கட்டி விளையாடுகின்றனர். ஆனால் விளையாடும் அனைவருக்கும் அவர்களது பணம் திரும்ப கிடைத்துவிடுவதில்லை. இது போன்ற ஆன்லைன் சூதாட்டங்களில் பணத்தை இழந்து சிலர் தற்கொலை செய்துகொள்ளும் சம்பவங்கள் அண்மைக் காலமாக அதிகரித்து வருகின்றன.

ஆன்லைன் சூதாட்ட விளம்பரங்களில் சினிமா மற்றும் கிரிக்கெட் பிரபலங்கள் நடிக்கக் கூடாது என்றும் கண்டனங்கள் எழுந்து வருகிறது. இந்நிலையில் ஆந்திர மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி இது குறித்து மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத்திற்கு கடிதம் எழுதியுள்ள்ளார்.

அந்த கடிதத்தில் அவர், ஆந்திர மாநிலத்தில் ஆன்லைன் சூதாட்ட வலைதளங்களை தடை செய்ய Internet Service Providers(ISP) எனப்படும் இணைய சேவை வழங்குனர்களுக்கு உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். ஆன்லைன் சூதாட்டத்தால் அதிகரிக்கும் குற்றங்களை தடுக்க இந்த நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என அந்த கடிதத்தில் ஜெகன் மோகன் ரெட்டி வலியுறுத்தியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது