தேசிய செய்திகள்

திருப்பதி தேவஸ்தானத்தின் தலைவராக ஜெகன் மோகன் ரெட்டியின் உறவினர் நியமனம்

திருப்பதி தேவஸ்தானத்தின் தலைவராக ஜெகன் மோகன் ரெட்டியின் சிற்றப்பா சுப்பா ரெட்டி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தினத்தந்தி

அமராவதி,

திருப்பதி தேவஸ்தானத்தின் தலைவராக ஜெகன் மோகன் ரெட்டியின் நெருங்கிய உறவினரும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளருமான சுப்பா ரெட்டி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று வெளியானது. ஆந்திர மாநில தலைமைச்செயலாளர் மன்மோகன் சிங் இதற்கான உத்தரவை நேற்று பிறப்பித்தார். திருப்பதி தேவஸ்தான தலைவராக இன்று சுப்பா ரெட்டி பதவியேற்க உள்ளார். திருப்பதி தேவஸ்தான கமிட்டியின் பிற உறுப்பினர்கள் விரைவில் நியமனம் செய்யப்படுவார்கள் என்று ஆந்திர அரசு தெரிவித்துள்ளது.

நியமன பதவியான திருப்பதி தேவஸ்தான தலைவர் பொறுப்பு, கேபினட் அந்தஸ்து கொண்டதாகும். மிகவும் செல்வாக்கு மிக்க பொறுப்புகளில் ஒன்றாக ஆந்திராவில் தேவஸ்தான தலைவர் பொறுப்பு விளங்குகிறது. சுப்பா ரெட்டி, ஜெகன் மோகன் ரெட்டியின் சிற்றப்பா ஆவார்.

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை